அமைச்சர் சஜித்திற்கு கால அவகாசம்! மகிந்த தரப்பு விடுத்துள்ள சவால்

Report Print Murali Murali in அரசியல்

எல்பிட்டிய பிரதேச சபையின் 17 தொகுதிகளிலும் ஒரு தொகுதியை வெற்றி கொண்டு காட்டுங்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 11ம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் தமக்கு இதற்கான பதிலை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை வெற்றிகொள்ளும் பொறுப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாம் சஜித் பிரேமதாசவிடம் கூறுகின்றோம். முடியுமானால் எல்பிட்டிய பிரதேச சபையின் 17 தொகுதிகளிலும் ஒரு தொகுதியை வெற்றி கொண்டு காட்டுங்கள் என அவர் மேலும் கூறினார்.