ஐக்கிய நாடுகள் சபையை தொடர்ந்தும் நடத்தப் பணம் இல்லை! அச்சம் வெளியிட்டார் பொதுச் செயலாளர்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஐக்கிய நாடுகள் சபையை தொடர்ந்தும் நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் சபை 230 மில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள நிதியும் தீர்ந்துவிடும் என்ற அபாயம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும்.

ஐ.நா. செயலகத்தில் உள்ள 37,000 ஊழியர்களுக்காக சம்பளம் மற்றும் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஐ.நாவுக்கு வழங்க வேண்டிய நிதிகளை உறுப்பு நாடுகள் முறையாக செலுத்தவில்லையெனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.