யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்!

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

களுத்துறை தெற்கு பகுதியில் உள்ள அசோகராம ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“தங்களது வாக்குகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். கூச்சலிடுவதும், தங்களது போட்டியாளர்களை வீழ்த்துவதும், வாக்காளர்களை ஈர்க்காது.

எனக்கு போதுமான அரசியல் அறிவு உள்ளது. இந்நிலையில், தோற்றவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு அழகான நாட்டை உருவாக்க நாங்கள் உதவ வேண்டும்.

அரசியல்வாதிகள் தங்கள் போட்டியாளர்களுக்கு எதிராக பொய்யாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

சில போட்டியாளர்கள் ஜனாதிபதி தேர்தலை, மற்றவர்களை மனரீதியாக தடுத்த அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளால் இழிவுப்படுத்தற்கான வாயப்பாக எடுத்துக்கொள்கின்றனர்.

எனினும் அவர்கள் இந்த முறையில் செயற்பட கூடாது” என கொழும்பு பேராயர் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.