மகிந்தவை வீழ்த்திய எமக்கு கோத்தபாய ராஜபக்ச பெரிய விடயமல்ல! அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

Report Print Murali Murali in அரசியல்

மகிந்த ராஜபக்சவை வீழ்த்திய எமக்கு, கோத்தபாய ராஜபக்சவை வீழ்த்துவது ஒன்றும் பெரிய விடயமல்ல என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்றுஇடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மைத்திரிபால சிறிசேனவை நாம் தான் ஜனாதிபதியாக நியமித்தோம். எனினும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் வித்தியாசங்கள் காணப்பட்டன.

அந்தக் கட்சியின் உறுப்பினர்களை நாம் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டாலும், வந்த முதல்நாளில் இருந்து அவர்கள், எமது காலை வாறும் செயற்பாட்டுகளையே முன்னெடுத்திருந்தனர்.

இறுதியாக பிரதமரைக்கூட அந்தப் பதவியிலிருந்து நீக்கினார்கள். எம்மை அமைச்சரவையிலிருந்து நீக்கினார்கள். ஆனால், நாங்கள் எதற்கும் அஞ்சவில்லை. இறுதியில் அவர்களுக்கு பெரும்பான்மையைக்கூட நிரூபித்துக்கொள்ள முடியாது போனது.

இந்நிலையிலேயே, பலரும் எமது கட்சி பிளவடையும் என்றும் இதனால், வெற்றிவாய்பை தாங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சிலர் கருதினார்கள். ஆனால், இறுதியில் எமது தலைவர்கள் ஒன்றிணைந்து சிறந்த முடிவை எடுத்துள்ளார்கள்.

அன்று எமக்கென ஒரு அரசாங்கம் இல்லாத நிலையில் மகிந்த ராஜபக்சவை வீழ்த்தினோம். இப்படியான எமக்கு இன்று கோத்தபாய ராஜபக்ச வீழ்த்துவது ஒன்றும் பெயரிய விடயமல்ல” என அவர் மேலும் கூறியுள்ளார்.