சஜித் மனுத் தாக்கல் செய்யும் போது உடன் செல்லாத ரணில்! காரணம் என்ன?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பிரதமர் ரணில் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் போது, பிரசன்னமாகி இருக்காமை தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி விளக்கமளித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் சஜித் பிரேமதாச வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் போது, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில், பொதுசெயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் உபத்தலைவர் உள்ளிட்ட யாரும் கலந்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிளவை இது எடுத்துக் காட்டுவதாக, சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. எனினும், அது உண்மைக்கு புறம்பானது என்று, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுசெயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் போது, அவரது கட்சியின் செயலாளர், சட்டத்தரணி மற்றும் வேட்பாளர் ஆகியோர் மாத்திரமே உடனிருக்க முடியும்.

அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர், சட்டத்தரணி மற்றும் வேட்பாளராக சஜித் பிரேமதாச ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பிரசன்னமாகி இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.