கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்! பதவியில் இருந்து விலகினார் மைத்திரி?

Report Print Vethu Vethu in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நேற்று மாலை விலகியதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்ட சூடான வாத விவாதங்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதால் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை வழங்க நோக்கில், தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி விலகியுள்ளார்.

எனினும் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து இன்னும் விலகவில்லை என ஜனாதிபதி மகன் தஹாம் சிறிசேன தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.