முட்டை ரொட்டியால் வந்த வினை! பொலிஸாரை தாக்கிய கணவன் - மனைவி

Report Print Vethu Vethu in அரசியல்

மாவனெல்ல பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இடையில் முட்டை ரொட்டியினால் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியுள்ளது.

இதனால் கணவன் மனைவியை தாக்கியதாக கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்க சென்ற பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

119 என்ற இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய மாவனெல்ல பொலிஸ் அதிகாரிகள் இருவர் அங்கு சென்று சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர், பொலிஸ் அதிகாரிகளினால் தனக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறி அவரும் வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார்.

சந்தேக நபர் குடிபோதையில் இருந்ததாகவும், அவர் ஒரு முட்டை ரொட்டி கொண்டு வந்து தனியாக சாப்பிட்டுள்ளார். பிள்ளைகளும் தங்களுக்கு முட்டை ரொட்டி வேண்டும் என கோரவும் மனைவி கடைக்கு சென்று முட்டை ரொட்டி வாங்கி வந்துள்ளார்.

இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மனைவியை தாக்கிய கணவனே சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.