பதவியிலிருந்து விலகியுள்ள பிவித்துரு ஹெல உறுமயவின் உதவி தலைவர்

Report Print Ajith Ajith in அரசியல்

பிவித்துரு ஹெல உறுமயவின் உதவி தலைவரான மதுமாதவ அரவிந்த தமது பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிராக அவர் ஆற்றிய உரை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த உரை தொடர்பில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் பொதுஜன பெரமுனவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கும் கட்சி என்ற வகையில் பிவித்துரு ஹெல உறுமயவின் உதவி தலைவர் பதவியிலிருந்து மதுமாதவ அரவிந்த விலகியுள்ளதாக தெரியவருகிறது.