ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டது! தோல்வி காண்பவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்

Report Print Ajith Ajith in அரசியல்

யாரை தோற்கடித்து யாரை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் ஏற்கனவே தீர்மானித்துவிட்டதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார்.

களுத்துறையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், மக்கள் தமது வாக்குகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து வைத்துள்ளார்கள்.

எனவே அவர்களுக்கு எதிரானவர்களுக்கு வாய்ப்புக்களை அவர்கள் வழங்கமாட்டார்கள்.

இந்த நிலையில் தேர்தலில் தோல்வி காண்பவர்கள் அவர்களின் தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.