இன்று அநுராதபுரத்திலிருந்து ஆரம்பமாகிறது கோத்தபாயவின் பிரச்சார பணிகள்

Report Print Ajith Ajith in அரசியல்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று தமது பிரச்சார பணிகளை ஆரம்பிக்கவுள்ளார்.

அநுராதபுர சல்காது மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த பிரச்சார பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச உட்பட்ட கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் இதன்போது பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ளவுள்ளதாக பெரமுனவின் பேச்சாளர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை கோத்தபாயவின் மாவட்ட மட்ட பிரச்சாரக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் வடக்கு மற்றும் கிழக்கும் அடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாவட்ட மட்ட பிரச்சாரக் கூட்டங்கள் தவிர 138 தொகுதி ரீதியான கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.