அரசியல்வாதிகளுக்கு ஓய்வு வயதில்லை! ரணில் கூறும் விடயம்

Report Print Ajith Ajith in அரசியல்

அரசியல்வாதிகளுக்கு ஓய்வு வயதில்லை. இதன்காரணமாகவே மஹிந்த ராஜபக்சவும் ஆர் சம்பந்தனும் இன்னும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பல்வேறு நிதி நெருக்கடிகளை சந்தித்தபோதிலும் அரச சேவையாளர்கள் 635, 000 பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையில் ஆசை சேவையாளர்களின் 85 வீதமான ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து வருடங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கவில்லை.

அதேநேரம் அரசாங்கம் சுகாதார சேவைகளில் பாரிய முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளதாக ரணில் குறிப்பிட்டார்.

Latest Offers