சூடு பிடிக்கும் தேர்தல் களம்! மைத்திரியின் தீர்மானத்தால் ஏற்படப் போகும் மாற்றம்

Report Print Steephen Steephen in அரசியல்

2019 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவருக்கும் ஆதரவளிக்க போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவளித்து ஜனாதிபதி சிறிசேன மேடைகளில் ஏறப்போவதில்லை

இந்தநிலையில் படைகளின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற வகையில் வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவர் தேர்தல் ஒன்று நியாயமாக நடைபெறவேண்டும் என்பதற்காக சுயாதீன தீர்மானத்தை எடுத்த சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மரண பயம், பதவிகள், சிறப்புரிமைகளை எதிர்பார்த்து, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, அக்கட்சியின் மேடைகளில் ஏற தீர்மானித்துள்ளதாகவும் பொதுஜன பெரமுனவுக்கு எந்த வகையிலும் ஆதரவளிப்பதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கொடுத்த கடும் அழுத்தங்கள் காரணமாகவே ஜனாதிபதி இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

எந்த வகையிலும் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் எனவும் ஆதரவளிக்க கூடாது எனவும் சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கடந்த சில தினங்களாக ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுத்து வந்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தீர்மானிக்க ஜனாதிபதி கடந்த 4ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை அழைத்து கருத்து கேட்டுள்ளார். இரண்டு பேரை தவிர ஏனையோர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டணியை ஏற்படுத்த கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் ஜனாதிபதி கிராம மட்டத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரிடமும் கருத்து கேட்டிருந்தார். ஜனாதிபதித் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஆதரவளித்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிந்து விடும் என அவர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.