இலங்கைத் தமிழர்கள், கோத்தபாயவை ஜனாதிபதியாக தெரிவு செய்தால் அவருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இந்திய அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் காணப்படும் மாநிலங்களுக்கான அனைத்து அதிகாரங்களையும் இலங்கையில் அமுல்படுத்த தாம் முன்னோடியாக செயற்படுவதாக இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.
எமது செய்தி சேவைக்கு இன்றைய தினம் பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,
தமிழ் மக்கள் கோத்தபாயவிற்கே வாக்களிக்க வேண்டும். சிறிய பிரச்சினைகள் ஏதாவது இருந்திருக்கலாம்.
ஆனால் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஆளுமை ராஜபக்சர்களுக்கே உள்ளது.
எனவே அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சிறந்த தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார்.