சஜித்தின் திருவாய் பற்றி கூறும் மகிந்த யாப்பா அபேவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்
244Shares

நாட்டை பாதுகாக்க மக்களுக்கு கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டை காட்டிக்கொடுப்பவர்களுக்கு நாட்டில் தொடர்ந்தும் இடமளிக்காது செயற்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஏற்கனவே தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாச மிகவும் பெறுமதியான திருவாய் பற்றி தற்போது பேசி வருகிறார். அந்த வாயிலாவது நாட்டை அபிவிருத்தி செய்யக் கூடிய விதம் பற்றி வெளியாகினால் நல்லது. கடந்த காலங்களில் நாட்டை துண்டாடி விற்கும் போது அந்த திருவாயில் எதுவும் வரவில்லை.

நாட்டுக்காகவும் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் அவரது திருவாயை திறக்க வாய்ப்பு கிடைக்கட்டும் என பிரார்த்திக்கின்றேன். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது தேர்தல் பணிகள் அனைத்தையும் ஆரம்பித்து முன்னெடுத்து வருகிறது எனவும் மகிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.