எவரையும் ஆதரிக்க போவதில்லை - குமார வெல்கம அறிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரையும் ஆதரிக்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தான் அரசியலில் இருந்து ஒதுங்க போவதாக பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நான் அரசியலில் இருந்து ஒதுங்க மாட்டேன். 37 ஆண்டுகளாக எனது உடலில் அரசியல் இருக்கின்றது. ஆனால், இந்த தேர்தலில் அமைதியாக இருந்து விடுவேன். நான் கூறியதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்ல மாட்டேன்.

அதேபோல் பொதுஜன பெரமுனவுக்கும் பணியாற்ற மாட்டேன். பொதுத் தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளது என குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

குமார வெல்கம இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தார். எனினும் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.