இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு உறுதியானது

Report Print Steephen Steephen in அரசியல்
842Shares

நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது ஆதரவை கோத்தபாய ராஜபக்சவுக்கு வழங்க தீர்மானித்துள்ளது.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர உறுதிபடுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

தொண்டமானின் கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை இன்னும் ஊடகங்களுக்கு அறிவிக்கவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எம்முடன் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட்ட கட்சி.

நேற்று முன்தினம் இரவு எங்களை சந்தித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கும் தீர்மானத்துடன் இருப்பதாக அவர்கள் கூறினர்கள்.

தொண்டமான் தலைமையிலான கட்சியும் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் என குறிப்பிட்டுள்ளார்.