காரைதீவில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள்

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா இதை அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து இதற்கு ஆதரவு தெரிவித்து காரைதீவு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தனர்.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்க முன் வந்ததையிட்டு இவ்வாறு ஆரவாரம் செய்துள்ளனர்.