தேசிய பாதுகாப்பு இல்லாமல் போனமைக்கு சஜித்தும் பொறுப்பு! கோத்தபாய

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் தேசிய பாதுகாப்பை இல்லாமல் ஆக்கியமைக்கான பொறுப்பை ரணில் மட்டுமல்ல சஜித்தும் ஏற்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு ஆதரவளிக்க முன்வந்தமை குறித்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு வழங்குவது ஆச்சரியமான விடயமல்ல. நாங்கள் முன்வைத்துள்ள மக்களை மையமாக கொண்டு அபிவிருத்தித்திட்டம் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைக்கு இணையானது.

நாட்டில் தற்பொழுது வறுமையில் வாழும் மக்கள் இருக்கின்றனர். அந்த மக்களை அதில் இருந்து மீட்டெடுக்கும் அபிவிருத்தித் திட்டமே எமக்கு தேவைப்படுகிறது. அப்படியான பொருளாதாரத் திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம் எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...