சு.கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் நாளை புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளைய தினம் கைச்சாத்திடப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நாளை முற்பகல் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்தது.

இதனடிப்படையில், இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.