மொட்டுச் சின்னத்திற்கு அல்ல கோத்தபாயவுக்கு ஆதரவு: தயாசிறி

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த வகையிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்காது எனவும் தேசிய சக்திகளுக்கே ஆதரவளிக்கும் எனவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்திற்கு அல்ல கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவது என சுதந்திரக் கட்சியினர் அனைவரும் தீர்மானித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் பொதுஜன பெரமுனவின் மேடையில் ஏற ஜனாதிபதி முற்றாக மறுப்பு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் பிரதானி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers