பல சர்ச்சைகளுடன் வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8ஆவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்றெவுள்ளது. நாட்டின் அடுத்த தலைமையை தெரிந்தெடுப்பதற்கான மாபெரும் பொறுப்பு இதன்மூலம் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 41 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியிருந்தனர். எனினும் கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற வேட்பு மனுத் தாக்கலின் போது 35 வேட்பாளர்களே வேட்பு மனுத் தாக்கலை செய்திருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம மற்றும் முன்னாள் சபாநாயகரும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் மற்றொரு சகோதரருமான சமல் ராஜபக்ச ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

தான் வெற்றிப்பெற போவதில்லை என்பதை அறிந்தே தான் போட்டியிடவில்லை என குமார வெல்கம அறிவித்திருந்தார். அத்துடன் சமல் ராஜபக்ச மற்றும் குமார வெல்கம ஆகியோர் ஏற்கனவே தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் அறிவித்திருந்தனர்.

மேலும், நால்வர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதுடன், வேட்புமனு தாக்கல் செய்த கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்கே சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அந்த ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டு 35 வேட்பாளர்கள் தற்போது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த ஜனாதிபதி தேர்தலானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

அது தொடர்பாக சிறப்பு தொகுப்பு இதோ,