கோத்தபாயவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளிகளாக வேண்டும்: சட்டத்தரணி அலி சப்றி

Report Print Steephen Steephen in அரசியல்

கோத்தபாய ராஜபக்சவின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியில் முஸ்லிம் மக்கள் பங்காளிகளாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

மதுமாதவ அரவிந்த அண்மையில் வெளியிட்ட மிகவும் கீழ்த்தரமான கருத்துக்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இது குறித்து அறிவிக்க வேண்டிய அனைத்து தரப்பினருக்கு அறிவித்தேன். கோத்தபாய ராஜபக்சவுக்கு இது பற்றி தெரியப்படுத்தினேன்.

இதனையடுத்து மதுமாதவ அரவிந்த பிவித்துரு ஹெல உறுமய கட்சியில் அனைத்து பதவிகளில் இருந்து அவர் விலகினார். இவற்றை நான் குறுஞ் செய்தி மூலம் அனைவருக்கும் அறிவித்தேன்.

இனவாதம் எந்த பக்கத்தில் இருந்து வந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுப்போம். இனவாதிகளுடன் இணைந்து ஒரு பயணத்தை செல்ல முடியாது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிகமான வெற்றி வாய்ப்பு கோத்தபாய ராஜபக்சவுக்கே இருக்கின்றது. அந்த வெற்றியில் பங்காளிகளமாக மாற இணைய வேண்டும்.

ஹக்கீம், பதியூதீன் ஆகியோரை மீண்டும் நெருங்க விடக்கூடாது. கோத்தபாய ராஜபக்ச இனவாதி அல்ல என்பதை நான் நன்கு அறிவேன்.

கோத்தபாய ராஜபக்ச மிக நேர்மையான தூரநோக்குள்ள தலைவர் எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி, கோத்தபாய ராஜபக்சவின் சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது