தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்படாத அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்! அமைச்சர் மனோ

Report Print Murali Murali in அரசியல்

2015ம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் அனைத்தும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்படும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாம் 2015ம் ஆண்டில் ஆட்சியமைத்த போது நிறைவேற்றதிகாரத்தை ஒழித்தல், தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் அதிகாரப்பரவலாக்கம் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தோம்.

அவற்றில் அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஓரளவிற்கேனும் குறைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று தேர்தல்முறை மாற்றத்தைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எம்மால் இயலுமாக இருந்திருக்கிறது.

எனினும் ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பரவலாக்கம் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் பின்னர் நாங்கள் ஆட்சியமைத்ததும் இவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.