ஆட்சியை மீண்டும் ஏகாதிபத்தியவாதிகளிடம் வழங்குவதா? சஜித் பிரேமதாச விடுத்துள்ள கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

நுளம்புகளைப் போன்று மக்களைக் கொன்ற ஏகாதிபத்தியவாதிகளிடம் மீண்டும் ஆட்சியதிகாரத்தை வழங்க வேண்டுமா என்பது குறித்து மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் தருணத்தில் மக்கள் முக்கிய தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“எதிர்காலத்தில் நாங்கள் முன்னெடுக்கவிருக்கும் பயணம் என்பது நாட்டின் தேசிய நலனை மையப்படுத்தியதே தவிர, அது தனியொரு குடும்பத்தினதோ அல்லது தனிநபர்கள் சிலரினதோ நலனை முன்னிறுத்தியதல்ல.

2015ம் ஆண்டில் ஏகாதிபத்தியத்திலிருந்து மீண்டு நாம் வெற்றிகண்ட சுதந்திரத்தை, இம்முறை தாரைவார்த்துக் கொடுத்துவிடக்கூடாது.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் தருணத்தில் மக்கள் முக்கிய தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

அன்று நாம் போராடிப்பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை தக்கவைத்துக்கொண்டு, ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தி முன்நோக்கிப் பயணிப்பதா அல்லது நுளம்புகளைப் போன்று மக்களைக் கொன்ற ஏகாதிபத்தியவாதிகளிடம் ஆட்சியதிகாரத்தை மீண்டும் வழங்குவதா என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.