கோத்தபாய ராஜபக்சவிற்கே ஆதரவு! பிரபா கணேசன் அறிவிப்பு

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அந்த கட்சியின் தலைவர் பிரபா கணேசன் இதனை தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய செயற்குழு நேற்று கூடி இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, தாங்கள் முன்வைத்த 20 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து இந்த முழுமையான ஆதரவு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.