கோத்தபாய ராஜபக்சவுடன் விரைவில் பேச்சுவார்த்தை! தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு

Report Print Murali Murali in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் விரைவில் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ராஜபக்ச தரப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கூட்டமைப்பின் நிலைப்பாட்டு குறித்து அவருக்கு தெளிவுப்படுத்தியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டிள்ளார்.

“நாங்கள் எங்களது நிலைப்பாட்டை அவருக்கு அறிவிப்போம். புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.

காணி விடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் எங்களிடம் உள்ளன. இந்நிலையில், சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை வெளியானதும் முடிவு எடுக்கப்படும்” என மேலும் தெரிவித்துள்ளார்.