கோத்தபாய ராஜபக்சவினால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்! அத்துரலிய ரத்ன தேரர்

Report Print Murali Murali in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டை காப்பாற்றக் கூடிய தலைவராக இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“பாரம்பரியம் அல்லாத ஒரு புதிய தலைவருக்கு இந்த நாடு ஏங்குகின்றது. சிறுநீரக நோய்க்கு பின்னர் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக உறுதியான முடிவெடுக்க கூடியவர் கோத்தபாய ராஜபக்ச.

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாடு முழுவதும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட வேண்டும். மக்களுக்கு தேவையானது ஒரு இனிமையான நாடு.

சுற்றுசூழலுக்கு உகந்த முறையில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பார்வை கோத்தபாய ராஜபக்சவிடம் இருக்கின்றது.

எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற செய்ய அனைத்து தரப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.