ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்று சேர்ந்திருப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கு எந்தவொரு தடங்கலும் இல்லை என அந்தக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண மக்களின் வாக்கு நிச்சயமாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் முஸ்லிம் மக்கள் சஜித் பிரேமதாசவின் அரசியல் கொள்கையை உயர்ந்த பட்ச அளவில் ஏற்றுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
இதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.