தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கோத்தாபய அழைப்பு? சுமந்திரன் வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு கோத்தபாய அழைப்பு விடுத்துள்ளதாக, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

நாங்கள் எமது நிலைப்பாட்டை அவர்களுக்கு எடுத்துக் கூறுவோம். அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை, காணிகள் விடுதலை உள்ளிட்ட வேறுபல பிரச்சினைகளும் இருக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனும் நாங்கள் பேச்சு நடத்தினோம். எமது கட்சியின் நிலைப்பாட்டை அவருக்கு விளக்கினோம்.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கிறோம். அதனைப் பொறுத்து முடிவு செய்வோம் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.