கோத்தபாயவின் பிரச்சார மேடையில் அசிங்கப்பட்ட பிரபல அரசியல்வாதி

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அனுராதபுரத்தில் கோத்தபாயவுக்கு ஆதரவாக நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க கலந்து கொண்டார்.

மேடையில் துமிந்த உரையாற்றிய சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களினால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அவர் மேடையில் இருந்து உரையாற்ற ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் இருந்து தாமரை மொட்டு ஆதரவாளர்கள் ஊ கூச்சலிட ஆரம்பித்துள்ளனர். அத்துடன் அங்கிருந்தவர்கள் அவரை கடுமையாக திட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

“அவரை எடுக்க வேண்டாம். இலாபத்திற்கு கட்சியை மாற்றிக்கொள்ளும் அவர்கள் எங்களுக்கு வேண்டாம். அவர் வந்தால் தோற்கடிப்போம் என எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட உறுப்பினர் ஹேஷான் சேமசிங்க தலையிட்ட போதும் அதனை தடுக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.