பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்

Report Print Kamel Kamel in அரசியல்

பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசாங்க அச்சகத் திணைக்களத்தினால் இந்த அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் பெயர் விபரங்களும் அகர வரிசையின் அடிப்படையில் எழுதப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவினால், அச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் நாட்களில் அதிகாரபூர்வமாக வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட உள்ளதாகவும் சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்குலம் எனவும் வரலாற்றில் மிகவும் நீளமான வாக்குச்சீட்டு இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது.

வாக்குச் சீட்டுக்கள் நீளமானவை என்பதனால் மேலதிகமாக வாக்குப்பெட்டிகள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.