கூட்டணி தொடர்பில் பொய்யான தகவலை வெளியிட்ட கோத்தாபய அணி!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தீர்மானிக்கவில்லை என அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் எம்.ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் உண்மைக்குப் புறம்பான கருத்தினை வெளியிட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்கும் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை. எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறும் தேசிய சபை அமர்வின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கட்சியின் உபதலைவர் மேலும் தெரிவித்தார்.