தலைமைப் பதவியில் இருந்து மைத்திரி விலகவில்லை

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற நிலைப்பாட்டை பின்பற்றுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் அதாவது எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதி வரையில் ஜனாதிபதி கட்சித் தலைமையில் நீடிக்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்காலிக அடிப்படையிலேயே பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மைத்திரி விலகிவிட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.