நீதிமன்ற தீர்ப்பை மதியாமல் முல்லைத்தீவு, நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் நடந்து கொண்ட விதம் சரியானதல்ல.
உடனடியாக ஞானசார தேரரைக் கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவைக்கு இன்று அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், 13ஆம் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துமாறு தமிழ் மக்கள் கோருவது சாதாரணமானது அல்ல. அவர்களுக்கு அது அத்தியாவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.