சுதந்திரக் கட்சியை முதன்மையாக நேசிக்கும் மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் நாட்டை பாதுகாப்பது சம்பந்தமாக ஒரே நிலைப்பாட்டில் இருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான அன்பு மகிந்த ராஜபக்சவிடம் தற்போதும் முதன்மையாக உள்ளதாகவும் எனினும் தான் நேசிப்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை எனவும் பசில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒன்றாக முன்நோக்கி செல்ல வேண்டும் என்பதையே காட்டியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.