இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானியாவுடன் பேச்சுவார்த்தை

Report Print Ajith Ajith in அரசியல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர் இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த பேச்சுக்களில் இலங்கையும் பிரித்தானியாவும் இணக்கம் ஒன்றை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மீளமைப்புத்துறை அமைச்சர் ஹர்ச டி சில்வா இது தொடர்பில் பிரித்தானிய சர்வதேச விவகார ராஜாங்க அமைச்சர் கோனர் பேர்ன்ஸூடன் பேச்சு நடத்தியுள்ளார்.

இதில் இலங்கைக்கு கிடைத்து வரும் ஜிஎஸ்பி சலுகை தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா எதிர்வரும் 31ஆம் திகதி வெளியேறவுள்ளது.

எனினும் இலங்கையுடன் அது தொடர்ந்தும் இணைந்து பணியாற்றும் என்று பிரித்தானிய அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.