கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக மீண்டும் நீதிமன்றத்தை நாட தயாராகும் சந்திரகுப்த தெனுவர

Report Print Steephen Steephen in அரசியல்

கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக அழகியல் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரகுப்த தெனுவர தெரிவித்துள்ளார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சிவில் அமைப்புகளின் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கோத்தபாய ராஜபக்ச தனது இரட்டை குடியுரிமையை வேட்புமனுவை தாக்கல் செய்யும் முன் உண்மையிலேயே இரத்துச் செய்தாரா என்பது கேள்விக்குரியது.

இதனால், அவருக்கு எதிராக மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்ல வாய்ப்பு இருக்கின்றது.

2015ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரத்தை அனுபவித்தே நாங்கள் கோத்தபாய ராஜபக்சவின் இரட்டை குடியுரிமை தொடர்பாக கேள்வி எழுப்ப நீதிமன்றத்திற்கு சென்றோம்.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். கேள்விகளை எழுப்ப வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. அவை குறித்து கேள்விகளை எழுப்பியே ஆக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.