மகிந்தவால் தப்பித்துவரும் கோத்தபாய

Report Print Steephen Steephen in அரசியல்

மன்னராக அபிஷேகம் செய்யப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சவை கடந்த 2015ஆம் ஆண்டு தோற்கடித்து மெதமுலன வளவில் முன் பக்க ஜன்னலில் தொங்கவிட்ட மக்கள், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவரது தம்பியை மெதமுலன வளவின் பின் பக்க ஜன்னலில் தொங்கவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என கலாநிதி தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

அன்று மன்னருக்கு பதிலாக இன்று போட்டியில் இறங்கியிருப்பவர் ஊன்றுகோள் வேட்பாளர் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச வரும் போது ஊடகவியலாளர்கள் பயத்தில் ஓடினர். ஆனால் இன்று ஊடகவியலாளர்கள் வரும் போது கோத்தபாய ஓடுகிறார். ஏன் அது ?. பெயருக்கே உரிய வகையிலேயே அவர் நடந்துக்கொள்கிறார்.

கோத்தபாய ஊடகவியலாளர்களுக்கு பயம். ஊடகவியலாளர்கள் வரும்போது எதுவும் பேசாமல் ஓடுகிறார். மகிந்த அருகில் இருந்துக்கொண்டு ஏதாவது ஒன்றை கூறி தப்பிக்க வைக்கிறார். மகிந்த இல்லை என்றால் பிணையும் இல்லை.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர். இவரை தான் நாட்டின் தலைவராக்க முயற்சித்து வருகின்றனர். கோத்தபாயவிடம் பொருளாதாரம், வெளிநாட்டு கொள்கைகள், அமைதி, நல்லிணக்கம் பற்றி கேட்டால் பதில் இல்லை. அவரிடம் இவை பற்றிய கருத்துக்கள் இல்லை.

கொல், வெட்டு, தூக்குவோம், விரட்டுவோம், கடத்திச் செல்வோம் இவைதான் இருக்கின்றன. கோத்தபாயவுக்கு எதிராக வழக்குகள் இருக்கின்றன. அவர் ஒரு வழக்கு பொருள். உலக திருடரை பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தியுள்ளனர்.

எனினும் அவருக்கு சில பிக்குமார் பிரித் ஓதுகின்றனர். பிரித் நூல் கட்டுக்கின்றனர், ஆசிர்வாதம் செய்கின்றனர். இவற்றை பார்க்கும் போது வெட்கமாக இருக்கின்றது. பௌத்த சாசனத்தில் இருந்து விலகி விடுவோமா என்றும் தோன்றுகிறது எனவும் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.