தனது ஆதரவு யாருக்கு! சரத் பொன்சேகாவின் அறிவிப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

தேசியப் பாதுகாப்பு தொடர்பிலான முழுப் பொறுப்பினையும் யார் வழங்குகின்றார்களோ அவருக்கு தமது ஆதரவு வழங்கப்படும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிததுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பு விவகாரம் தொடர்பிலான பொறுப்புக்களை தம்மிடம் ஒப்படைப்பதாக பகிரங்கமாக அறிவிக்கும் வேட்பாளர் ஒருவருக்கே தமது ஆதரவு எனத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதல் பிரச்சாரக் கூட்டத்தில் இது குறித்து சஜித் பிரேமதாச பகிரங்கமாக அறிவிக்கத் தவறினால் தாம் ஓர் தீர்மானம் எடுக்க நேரிடும் என சரத் பொன்சேகா கூறியுள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

கோத்தபாய ராஜபக்சவிடமும் இந்த விடயத்தை சரத் பொன்சேகா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.