சஜித்திற்கு ஆதரவளிக்க தயாராகும் சு.கட்சியின் அமைப்பாளர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 40க்கும் மேற்பட்ட தொகுதி அமைப்பாளர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக தொகுதி அமைப்பாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் இந்த தொகுதி அமைப்பாளர்கள் விரைவில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இணைந்துக்கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.