சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி வைத்தால் எமக்கு தடையில்லை! ஐ.தே.கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைத்தாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கு தடையாக இருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான உறுப்பின்கள் தமது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவது எமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அந்த கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் எங்களுடன் இருந்தவர்கள். கடந்த காலங்களில் எம்மோடு இருந்துக்கொண்டு எமது காலை பிடித்து இழுத்ததால், எங்களால் பல முக்கியமான வேலைகளை செய்ய முடியாமல் போனது.

இணைந்து கொண்ட சிலரை தவிர, கிராம மட்டத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அனைவரும் எமது வேட்பாளருக்கு ஆதரவளிக்க எங்களுடன் இணைந்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அந்த கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் எங்களுடன் ஏற்கனவே இணைந்துள்ளனர் எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.