நாட்டு மக்களுக்கு இரண்டு தெரிவுகளை வழங்கிய அமைச்சர் அகில

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாட்டு மக்களுக்கு இந்த நாடு வேண்டும் என்றால் அன்னப்பறவைக்கு வாக்களிக்கலாம், அல்ல ஒரு குடும்பம்தான் வேண்டும் என்றால் கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களிக்கலாம் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் தற்போது கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்று வருகின்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியை பிளவுப்படுத்தாமல் நிதானமாக மிகவும் சரியான தெரிவு ஒன்றை எடுத்துள்ளார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers