நம் நாட்டின் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை! அமைச்சர் நவீன்

Report Print Jeslin Jeslin in அரசியல்

நம் நாட்டின் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை. ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள அனைத்து குழுக்களும் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவை இலங்கையின் ஜனாதிபதியாக தேர்வு செய்துள்ளன என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இது ஒரு இளம் தலைவரின் வருகையை குறிக்கிறது. நம் நாட்டின் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை.

ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள அனைத்து குழுக்களும் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவை இலங்கையின் ஜனாதிபதியாக தேர்வு செய்துள்ளன.

கோத்தபாய ராஜபக்சவுக்கு மக்களின் விருப்பு வெறுப்பு தெரியாது. இந்த நாட்டின் மக்கள் அவர்களுடன் சேர்ந்து அடிமட்டத்தில் இருந்து எழுந்த ஒருவரையே நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பார்கள்.

இரத்தக்கறை படிந்த தலைவர் ஒருவர் இந்த நாட்டுக்கு அவசியமில்லை. கோத்தபாய ஜனாதிபதியானால், மஹிந்த பிரதமராக இருப்பார், பசில் மற்றும் நாமல் ஆகியோர் அமைச்சரவையில் இருப்பார்கள்.

மற்ற உறவினர்கள் அனைவரும் உயர் பதவிகளில் இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இந்த வகையான குடும்ப அரசியலை நாட்டிற்குள் மீண்டும் கொண்டுவர நாம் அனுமதிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...