சஜித் பிரேமதாசவின் பிரார்த்தனையைக் கூறிய ரவி கருணாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய நாட்டுக்குள் ஒரு சட்டத்தின் கீழ் நாட்டை முன்னெடுத்துச் செல்வதே சஜித் பிரேமதாசவின் பிரார்த்தனை என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் தற்போது காலிமுகத்திடலில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நவம்பர் 16ஆம் திகதி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கும் போராட்டத்தை ஆரம்பிக்கவே நாங்கள் அனைவரும் இங்கு வந்துள்ளோம்.

நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்தவே இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். எதிரணியினர் கொழும்பில் ஒன்றை கூறிவிட்டு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், தென் பகுதிகளுக்கு வேறொன்றை கூறுகின்றனர். அப்படியான தலைவர்கள் எங்களிடம் இல்லை.

ஐக்கியமான நாட்டுக்குள் விரிவான அதிகாரத்தை பரவலாக்கி, சட்டத்தை அமுல்படுத்தி, ஐக்கிய இலங்கையை முன்னெடுத்துச் செல்வதே ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்பார்ப்பு.

நவம்பர் 16ஆம் திகதி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவு செய்து, நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வோம் எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறும் இந்த முதலாவது பிரசாரக் கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.