ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிலர் பிளவை ஏற்படுத்த முயன்றனர்- எ.ஸ்.பி திஸாநாயக்க

Report Print Ajith Ajith in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயன்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எ.ஸ்.பி திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிலர், பொதுஜன பெரமுனவின் இணைவதை தாமதப்படுத்தி வந்தனர்.

எனினும் தாம் கடும் முயற்சியை மேற்கொண்டு பொதுஜன பெரமுனவுடன் இணைவதற்கு நடவடிக்கையை எடுத்ததாகவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைவை எதிர்த்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க நேற்று அநுராதப்புரத்தில் வைத்து கோத்தபாயவுக்கு ஆதரவு வெளியிட்டமை சந்தோசத்தை அளிப்பதாகவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Latest Offers