ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவை ஒக்டோபர் 17வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிணை நிபந்தனைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமது வீட்டில் ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அபேசேகர 2005ஆம் ஆண்டு மே 30ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பிணையில் இருந்தபோது இரண்டு முறை அதனை மீறினார் என்று காவல்துறையினர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்தே அவரை சிலாபம் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.