இலங்கைக்கு யூரோக்களை வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக பாதுகாப்புக்காக ஐரோப்பிய ஒன்றியம் 40 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது.

இதற்கான உடன்படிக்கை நிதியமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை - மாலைத்தீவுக்கான தூதுவர் டங் லாய் மார்க் ஆகியோரால் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் படி நல்லிணக்க நடவடிக்கைகள் வடக்கு,கிழக்கு வடமத்திய, ஊவா மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதற்கு மறைமுக முகாமைப்பணிகளை பிரிட்டிஸ் கவுன்ஸில், உலக வங்கி, யு.என்.டி.பி என்பன மேற்கொள்கின்றன.