கொழும்பு காலி முகத்திடல் பசிலின் சாதனையை முறியடித்த சஜித்!

Report Print Vethu Vethu in அரசியல்

2017ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி காலி முகத்திடலில் நடத்திய மே தின கூட்டத்தின் சாதனையை, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் நேற்றைய மக்கள் கூட்டம் முறியடித்துள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியின் அன்றைய கூட்டத்தில் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பாரியளவில் கலந்து கொண்டிருந்தனர். இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கூட்டம் அதுவென பொதுஜன பெரமுன கட்சி அறிவித்திருந்தது.

அந்த வெற்றிகரமான கூட்டத்திற்கு பின்னால் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவே செயற்பட்டார். அதன் பின்னர் பசில் இன்றி நாமல் நடத்திய அனைத்து பொதுஜன பெரமுன கூட்டங்களும் முழுமையாக தோல்வியடைந்தன.

எப்படியிருப்பினும் பசிலின் அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நேற்றைய கூட்டத்தை நடத்தியிருந்தார்.

நேற்றைய கூட்டத்தில் சுமார் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்மூலம் பொதுஜன பெரமுன கட்சியின் சாதனையை, நேற்றைய தினம் சஜித் பிரேமதாஸ முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.