ஐ.தே.கவின் தலைவர் மாறாமல் சஜித் வெற்றி பெற்றால் இதுதான் நடக்கும்! விஜித ஹேரத்

Report Print Sujitha Sri in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமரும் மாறாமல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் பழைய திருடர்களே ஆட்சி புரிவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உள்ள அதிகாரங்கள் கூட இருக்காது.

அனைத்து அதிகாரங்களும் பிரதமருக்கே இருக்கும். ஜனாதிபதிக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம், அமைச்சரவையை கூட்டும் மற்றும் நியமிக்கும் அதிகாரம் என்பனவே இருக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமரும் மாறாமல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் பழைய திருடர்களே ஆட்சி புரிவார்கள்.

எனவே நாம் அதனை நாட்டு மக்களுக்கு சுட்டிக்காட்டுகின்றோம். நாம் அதனை எதிர்க்கின்றோம்.

அதனால் இந்த கொள்ளையர்களை ஆட்சியில் இருந்து துரத்தி விட்டு அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாக்களிக்கவும். எமது சின்னமானது திசைக்காட்டி.

எமது சின்னத்திற்கு வாக்களித்து எம்மை வெற்றியடைய செய்து நாட்டை சரியான திசையை நோக்கி எடுத்துச் செல்ல ஆதரவு வழங்கவும் என கோரியுள்ளார்.