சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் பதவி குமார வெல்கமவுக்கு?

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் தலைவராக அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான குமார வெல்கமவை நியமிக்க உள்ளதாக தெரியவருகிறது.

இந்த அமைப்பை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட தலைமைத்துவ மட்டத்தை சேர்ந்த 15க்கும் அதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் நேற்று கொழும்பில் கூடியதுடன் கோத்தபாய ராஜபக்சவை தோற்கடிக்க கூடிய இயலுமை இருக்கும் பிரதான வேட்பாளர் சஜித் பிரேமதாச என தீர்மானித்துள்ளனர்.

இதனடிப்படையில் அவர்கள் அமைச்சர் மங்கள சமரவீரவின் வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் உறுப்பினரான ரஜிக கொடித்துவக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்க எடுத்த தீர்மானத்தை பெரும்பான்மையான தொகுதி அமைப்பாளர்கள் எதிர்த்துள்ளதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 183 தொகுதி அமைப்பாளர்களை அழைத்து கருத்து கேட்ட போது, அவர்களில் இருவவரை தவிர வேறு எவரும் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கவில்லை.

கூட்டத்தின் அறிக்கையை கட்சியின் செயலாளர் பகிரங்கப்படுத்தினால், அதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் ரஜிக கொடித்துவக்கு கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாடு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து குமார வெல்கமவின் புகைப்படத்துடன் சஜித்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி கிராம மட்டத்தில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Latest Offers

loading...